பாப்பிரெட்டிப்பட்டி 11 செப்டம்பர் 2025 (ஆவணி 26) -
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பட்டுகோணாம்பட்டி, மஞ்சவாடி ஊராட்சிகளுக்காக சாமியாபுரம் கூட்ரோடு திருமகள் திருமண மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது. இப்பகுதி மக்கள் தொகையில் சுமார் 90 சதவீதம் மலைவாழ் பழங்குடியினர் என்பதால், இந்த முகாம் அவர்களுக்கு முக்கியமாக இருந்தது. ஆனால், முகாம் நடைபெறும் விதத்தில் ஒருங்கிணைப்பு இல்லாததால் பொதுமக்கள் “எங்கே செல்வது? யாரை பார்க்க வேண்டும்?” என்று குழப்பத்துடன் அலைந்து திரிந்தனர்.
முகாமுக்கு உரிய வழிகாட்டுதல் இல்லாமல் மக்கள் திணறிய நிலையில், திமுகவினர் ஆர்வம் காட்டாததால் அதிகாரிகளும் மெத்தனம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், திட்டத்தின் முழுமையான பயன் மக்களிடம் சென்றடையவில்லை என்ற கவலை நிலவுகிறது.